Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மனைவியை சமாதானப்படுத்த சென்ற வாலிபர்…. அக்காள் கணவரின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்…!!!

வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தீவனூர் பகுதியில் ஜெகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் மகாலட்சுமி அதே பகுதியில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து தனது மனைவியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வருவதற்காக ஜெகன் மாமியார் வீட்டிற்கு சென்றார்.

அப்போது மகாலட்சுமியின் அக்காள் கணவரான அன்புராஜ் என்பவருக்கும், ஜெகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் அன்புராஜ் உருட்டு கட்டையால் ஜெகனை சரமாரியாக அடுத்ததால் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று ஜெகனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய அன்பு ராஜை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |