ராணிப்பேட்டையில் குடிபோதையில் தன்னுடைய மனைவியையே குத்திக்கொலை செய்த பெயிண்டரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தில் பெயிண்டர் தொழிலை செய்து வரும் முருகன் என்பவர் அவருடைய மனைவியான கீதா என்பவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முருகன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வருவதால் கணவன் மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று முருகன் மதுவினை குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த அவர் வீட்டினுள் இருந்த கத்தியை கொண்டு கீதாவை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் அலறிய கீதாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகனை கைது செய்ததோடு மட்டுமல்லாமல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.