மனைவியை கடப்பாரையால் தாக்கிய கூலித்தொழிலாளி அச்சத்தில் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள ஆண்ராப்பட்டி அருந்ததியர் தெருவில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளது. இந்நிலையில் பழனி தினமும் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்வதால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று பழனி மதுபோதையில் வீட்டிற்கு சென்று லட்சுமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் ஆத்திரமடைந்த பழனி கடப்பாரையால் மனைவியை தாக்கியுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த லட்சுமி மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். இதனைதொடர்ந்து மனைவி இறந்துவிட்டதாக நினைத்த பழனி அச்சத்தில் அவர் கத்தியால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனையரித்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பழனி மற்றும் லட்சுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் 2 பேரையும் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அங்கு சிகிச்சை பலனின்றி பழனி உயிரிழந்த நிலையில் லட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்த தகவலறிந்து சென்ற திருச்செங்கோடு ரூரல் காவல்துறையினர் பழனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனைதொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.