Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மனைவியை தாக்கிய கணவன்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சனையில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பூதமங்கலம் கிராமத்தில் தனபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்மணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தனபாலனுக்கும்  அவரது மனைவி கண்மணிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த தனபாலன் கண்மணியை  தாக்கியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த கண்மணி வீட்டில் விஷம் குடித்து மயங்கியுள்ளார்.

இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த கண்மணியை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு  செல்லும் வழியிலேயே கண்மணி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |