Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மனைவியை பார்க்க சென்ற கணவர்…. ஓட்டுநர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

லாரி ஓட்டுநரை தாக்கிய மனைவி மற்றும் அவரது தம்பி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கரூர் மாவட்டத்திலுள்ள கரட்டுப்பட்டியில் லாரி ஓட்டுநரான பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு துர்கா தேவி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் துர்காதேவி தனது 2 குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் பழனிவேல் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்காக வேதாச்சலபுரத்திலிருக்கும் மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு துர்கா தேவியும், அவரது தம்பி சூர்யாவும் இணைந்து பழனிவேலை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் காயம் அடைந்த பழனிவேல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |