பெண் காவலாளியை தாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிங்கம்பாறை பகுதியில் கட்டிட தொழிலாளியான லூர்து ரஞ்சித் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவியை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ரஞ்சித் தனது மனைவியை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்த பெண் காவலாளி முத்து என்பவர் ரஞ்சித்திடம் உள்ளே செல்லக்கூடாது என கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த ரஞ்சித் முத்துவுடன் தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரஞ்சித்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.