மனைவி மற்றும் மாமியாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள உத்திரகுடி கிராமத்தில் கலையரசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கலையரசன் யுவராணி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு வயதுடைய பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக யுவராணி தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து கலையரசன் யுவராணியை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அங்கு கலையரசன் யுவராணியை திட்டி தாக்கியுள்ளார். இதனை தடுக்க வந்த யுவராணியின் தாய் மற்றும் பாட்டியை கலையரசன் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து யுவராணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கலையரசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.