மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள சுக்காங்கல்பட்டி தெருவில் ஆனந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வரும் இவருக்கு ஜான்சிராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஜான்சிராணி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்க்கு சென்றுள்ளார். இதனால் ஆனந்த் மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து விரக்தியடைந்த ஆனந்த் வீட்டில் தனது அறையில் வைத்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைதொடர்ந்து அவருடன் வேலை பார்க்கும் சக ஊழியர்கள் ஆனந்தை பார்க்க வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஆனந்த் தூக்கில் பிணமான தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்து கம்பம் தெற்கு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஆனந்தின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.