Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவியை பிரிந்த ஏக்கம்…. சடலமாக தொங்கிய தொழிலாளி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் கூலித் தொழிலாளியான மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மணிகண்டன் மது குடித்துவிட்டு அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் கோபமடைந்த மணிகண்டனின் மனைவி தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் மனைவி பிரிந்து சென்றதால் மன உளைச்சலில் இருந்த மணிகண்டன் குடிபோதையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |