மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் தாலுகாவிற்கு உட்பட்ட மத்தி3கிரியை அடுத்து இருக்கும் இடையநல்லூரை சேர்ந்தவர் சுரேஷ். இவரின் மனைவி திரிவேணி. சுரேஷுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. அவர் அடிக்கடி மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் சென்ற 2018 ஆம் வருடம் ஜூன் 11ஆம் தேதி அன்று உடலில் தீக்காயங்களுடன் திரிவேணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திரிவேணி உயிரிழப்பதற்கும் முன்பாக தனது கணவர் தன்னை அடித்து தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக மரண வாக்குமூலம் மூலம் கொடுத்துள்ளார். இதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்கள். இந்த வழக்கானது கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட சுரேஷிற்கு ஆயுள் தண்டனையும், 5000 அபராதமும் கட்ட தவறினால் ஆறு மாத சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளார்.