Categories
தேசிய செய்திகள்

பெரும் அதிர்ச்சி…! மனைவியை 15 பேருடன் சேர்ந்து…. கணவர் செய்த கொடூரமான செயல்…!!!!

திரிபுரா மாநிலம், கோவாய் மாவட்டத்தில் பெண் ஒருவரை கும்பல் ஒன்று கொடூராமாக தாக்குவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலிஸார் அப்பகுதிக்கு சென்றபோது, பெண் ஒருவர் பலத்த காயத்துடன் மயக்க நிலையில் இருந்துள்ளார். பிறகு போலிஸார் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பெற்ற பிறகு அந்த பெண் சுயநினைவிற்கு திரும்பியுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை செய்தபோது அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

அந்த பெண்ணின் கணவர், மனைவிக்கு வேறு ஒருவருடன் பழக்கம் இருந்து வருகிறது என சந்தேகப்பட்டுள்ளார். இதனால், அவரது கணவன் உட்பட 15 பேர் அந்த பெண்ணை வயல் பகுதிக்கு அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கியுள்ளனர். பிறகு அவருடன் பழகி வந்ததாக கருதப்படும் நபரையும் தூக்கி வந்து இருவருக்கும் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்க முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் அந்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள்தான் கணவனுடன் சேர்ந்து இத்தகைய கொடூர செயலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் போலிஸார் அவரது கணவன் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |