குடும்ப சண்டையில் மனைவியை 8 வது மாடியில் இருந்து தூக்கி வீசி கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் லெக்னௌ அருகே கோஸைகஞ்ச் பகுதியில், வசித்து வருபவர் சஞ்சீவ் (36), இவரது மனைவி நீது (32) இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகளும் 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் திருமணமான நாள் முதலே இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாக்குவாதம் முற்றிய நிலையில் சஞ்சீவ் தனது மனைவியை எட்டாவது மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்துள்ளார். இதுகுறித்து அந்த பெண்ணின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் சஞ்சீவ் கைது செய்யப்பட்டுள்ளார்.