சினிமா உதவி இயக்குனர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாதாண்டகுப்பம் பகுதியில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குடும்பத்துடன் சென்னை சைதாப்பேட்டையில் வசித்து வந்துள்ளார். இவர் சினிமா துறையில் உதவி இயக்குனராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 20-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சந்திரன் திரும்பி வரவில்லை. இதனால் சந்திரனின் மனைவி சரஸ்வதி தனது கணவரை காணவில்லை என சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சந்திரனை தீவிரமாக தேடி வந்தனர்.
நேற்று அப்பகுதியில் இருக்கும் தனியார் தோட்டத்தில் இருக்கும் மரத்தில் சந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சந்திரனின் உடலை விட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.