Categories
தேனி மாவட்ட செய்திகள்

மனைவி இறந்ததால் வேதனை… கணவனின் விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மனைவி உயிரிழந்த விரக்தியில் கணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள சோட்டானிக்கரை கோவில் தெருவில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். சுமைதூக்கும் தொழிலாளியான இவருக்கு நதியா என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். இதில் நதியா கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதனால் ரமேஷ் மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து வாழ்வில் விரக்தியடைந்த ரமேஷ் புதுக்குளம் செல்லும் சாலையில் உள்ள ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக கம்பம் வடக்கு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ரமேசின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |