முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே புங்கரை பகுதியில் தங்கசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி இறந்து விட்டார். இதனால் மனமுடைந்த தங்கசாமி மது குடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தங்கசாமி வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். இதனையடுத்து தங்கசாமி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து விஷம் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் தங்கசாமியை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தங்கசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தக்கலை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.