கேரளாவைச் சேர்ந்தவர் பிஜு. இவருடைய முதல் மனைவி கோழிக்கோடு மாவட்டம் நன்மண்டா பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கியில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவருடன் விவாகரத்து ஆனதையடுத்து பிஜூ இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இதற்கிடையில் இருவருக்கும் விவாகரத்து ஆன நிலையில் கருத்து மோதல் நிலவி வந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பெண் வேலைக்கு வராமல் விடுமுறை எடுத்துள்ளார். எனவே அவர் வழக்கமாக அமர்ந்து வேலை செய்யும் இருக்கையில் சக ஊழியரான ஸ்ரீஷ்மா என்பவர் அமர்ந்து வேலை செய்துள்ளார். அப்போது அந்த வங்கிக்கு சென்ற பிஜூ தனது முன்னாள் மனைவி தான் அவரது இருக்கையில் அமர்ந்திருப்பதாக நினைத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஸ்ரீஷ்மாவை சரமாரியாக வெட்டியுள்ளார்.
ஸ்ரீஷ்மா முகக்கவசம் அணிந்திருந்ததால் அவருக்கு அடையாளம் தெரியவில்லை. இந்த தாக்குதலில் ஸ்ரீஷ்மா படுகாயமடைந்த நிலையில் அவரை மீட்ட சக வங்கி ஊழியர்கள் மருத்துவமனையில் கொண்டு சென்று அனுமதித்துள்ளனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து காவல்துறையினர் பிஜூவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.