Categories
தேனி மாவட்ட செய்திகள்

மனைவி கண்டித்ததால் சோகம்…. உயிரிழந்து கிடந்த தொழிலாளி…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

மனைவி கண்டித்ததால் வெளியே சென்ற கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் சிவராம் நகரில் செல்வேந்திரன்(56) என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டிட தொழிலாளியான இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு செல்வேந்திரனுக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சந்திரா செல்வேந்திரனையும் அவருடன் தகராறு செய்தவர்களையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வேந்திரன் வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.

இந்நிலையில் தேனி அருகே உள்ள மலைகரட்டுப் பகுதியில் செல்வேந்திரன் உயிரிழந்து பிணமாக கிடந்துள்ளது. இதனையறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தேனி போலீசார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பரிசோதனை முடிவில் செல்வேந்திரன் அரளிவிதையை அரைத்து தின்று தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து சந்திரா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |