ஹரியானா மாநிலத்தின் ஹான்சி பகுதியை சேர்ந்தவர் விகாஸ். இவர் மீது மொத்தம் 21 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஏற்கனவே பல குற்ற வழக்குகளில் கைதாகி தற்போது பரோலில் இருந்த இவர் தனது வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.அப்போது ஏழு பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்து அவரது மனைவி கண் முன்னே சரமாரியாக வெட்டியது. அதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதில் விகாஸின் மனைவி மற்றும் குழந்தைகள் அக்கும்பலிடம் தாக்குதலை நிறுத்தக்கோரி கெஞ்சுகின்றனர். இருப்பினும் அக்கும்பல் விடாமல் தாக்கி விகாஸைக் கொல்வது பதிவாகியுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.