திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தேவர்சிலை பகுதியில் பெயிண்டரான சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகாசி அம்மன் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த தொழிலாளி ஆரோக்கியராஜ் என்பவர் அறிமுகமானார். இருவரும் பழனியில் பெயிண்டிங் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் சீனிவாசனும், ஆரோக்கியராஜும் பொள்ளாச்சி பெருமாள் செட்டி வீதியில் மது அருந்திவிட்டு பேசி கொண்டிருந்தனர். அப்போது ஆரோக்கியராஜின் மனைவி குறித்து சீனிவாசன் தவறாக பேசியுள்ளார்.
இதனால் கோபமடைந்த ஆரோக்கியராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சீனிவாசனை குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த சீனிவாசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சீனிவாசன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஆரோக்கியராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.