விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கூத்தனூர் கிராமத்தில் விவசாயியான செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு லிங்கேஷ், இனியா என்ற 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரியா தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில் மனைவி பிரிந்து சென்றதால் மன உளைச்சலில் இருந்த செல்வம் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.