மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி தீர்பளித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அடுத்துள்ள தோளூர் தெற்குபட்டி கிராமத்தில் தர்மர் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு பஞ்சவர்ணம் என்ற மனைவியும் 5 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தர்மர் தனது மனைவி மீது சந்தேகப்பட்டு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து அபிராமம் காவல்துறையினர் தர்மரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த வழக்கு ராமநாதபுரம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இதன் இறுதி விசாரணை நீதிபதி சுபத்ரா தலைமையில் நேற்று நடைபெற்றுள்ளது. அப்போது நடத்திய பிறகு மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த தர்மருக்கு ஆயுள் தண்டனையும், 3,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்பளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் தர்மரை சிறையில் அடைத்துள்ளனர்.