Categories
தேனி மாவட்ட செய்திகள்

மனைவி கொலை வழக்கு…. 2 ஆண்டுகளுக்கு பிறகு…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் முத்துக்கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு அங்காளஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முத்துக்கண்ணன் அடிக்கடி வீட்டிற்கு குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் ஈஸ்வரி கோபித்துகொண்டு குழைந்தையை அழைத்துக்கொண்டு அதே ஊரில் உள்ள தனது தம்பி சங்கிலி வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் கடந்த 2018ஆம் ஆண்டு முத்துக்கண்ணன் சங்கிலியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

எனவே இதுகுறித்து சங்கிலி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் முத்துக்கண்ணனை கைது செய்துள்ளனர். இதனையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்த முத்துக்கண்ணன் சங்கிலியின் வீட்டிற்கு சென்று அங்காளஈஸ்வரியிடம்  தகராறு செய்துள்ளார். அப்போது நடந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த முத்துக்கண்ணன் அவர் மறைத்து வைத்திருந்த திருப்புளியை எடுத்து அங்காளஈஸ்வரியை குத்தி கொலை செய்துள்ளார். இதுகுறித்து சின்னமனூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த முத்துகண்ணனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த வழக்கு தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் நீதிபதி வெங்கடேசன் தலைமையில் வழக்கின் இறுதி விசாரணை நடைபெற்றுள்ளது. அப்போது மனைவியை கொலை செய்த முத்துக்கண்ணனுக்கு ஆயுள் தண்டனையும், கொலை செய்யும் நோக்கத்தோடு அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த குற்றத்திற்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்பளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் முத்துக்கண்ணனை பாதுகாப்பாக அழைத்து சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |