Categories
தேனி மாவட்ட செய்திகள்

மனைவி கொலை வழக்கு… 9 ஆண்டுகளுக்கு பிறகு… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

மனைவியை கொலை செய்த வழக்கில் கணவனுக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள பொட்டல்களம் கிராமத்தில் சின்னதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு பவுன்தாய் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்து தனித்தனியாக வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து பவுன்தாய் தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளது.

இதுகுறித்து எந்த தகவலும் சின்னதுரைக்கு தெரிவிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சின்னதுரை கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வீட்டிலிருந்த பவுன்தாயை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். இதனையடுத்து சின்னதுரையும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சின்னதுரையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறையினர் சின்னதுரை மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கு தேனி மகளிர் நீதிமன்றத்தில் கடந்த 9 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் இதற்க்கான இறுதி விசாரணை நேற்று நடைபெற்றுள்ளது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கடேசன், மனைவியை கொலை செய்த சின்னதுரைக்கு ஆயுள் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் அடிப்படையில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் சின்னதுரையை மதுரை மத்தியச்சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |