இந்திய தண்டனைச் சட்டத்தின் 375 வது பிரிவில் உள்ள விதிவிலக்கு 2 ன் படி மனைவியை கட்டாயப்படுத்தி கணவர் பாலியல் உறவு கொண்டால், அது பாலில் வன்கொடுமை அல்ல. இந்த விதிவிலக்குக்கு எதிராக அனைத்திந்திய ஜனநாயகம் மகளிர் கூட்டமைப்பு ஆர்ஐடி அறக்கட்டளை மற்றும் தனி நபர்கள் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 375 வது பிரிவின் கீழ் மனைவியின் சம்மதம் இல்லாமல் கணவர் பாலியல் உறவு கொள்வது வன்கொடுமை அல்ல என அறிவிக்கப்பட்டுள்ள விதிவிலக்கு கணவர்களால் பாலியல் ரீதியாக துன்பப்படுத்தப்படும் திருமணமான பெண்களுக்கு பாகுபாடு காட்டுகிறது. எனவே அந்த விதிவிலக்கு ரத்து செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மனு கடந்த மே மாதம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜு ஷக்தர், ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி ராஜு ஷக்தர் கூறியது, இந்திய தண்டனை சட்டம் வந்து 162 ஆண்டுகளான பிறகும், நீதி கோரும் திருமணமான பெண்களுக்கு செவி காட்டாமல் அது துயரமானது ஆகும். கணவரால் மனைவி பாலியல் ரீதியாக துன்பப்படுத்தப்படுவதை பாலில் வன்கொடுமை என்றே அழைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். ஆனால் 375 வது பிரிவின் விதிவிலக்கு 2 அரசமைப்புக்கு எதிரானது அல்ல என்று கூறி விதிவிலக்கை ரத்து செய்ய நீதிபதி ஹரிசங்கர் மறுப்பு தெரிவித்தார். இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்த நிலையில், இந்த விவகாரம் குறித்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்களில் மனைவியை கட்டாயப்படுத்தி கணவர் பாலியல் உறவு கொள்வதை குற்றமாக கூறப்பட்டுள்ள நிலையில் அவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமரும் முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனு குறித்து மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள் வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒத்திவைத்தனர்.