சேலம் மாவட்டத்தில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள ஜாகீர் அம்மாபாளையம் சாஸ்திரி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பிருந்தா என்ற மனைவி இருந்தார். இத்தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிருந்தா வீட்டில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மணிகண்டன் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிருந்தாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பிருந்தாவின் கணவனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.