Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மனைவி, தாயுடன் தகராறு…. மீனவர் தூக்கிட்டு தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினம் மங்கலவாடி சுனாமி நகரில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனவரான மதன் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த மதனை அவரது மனைவியும், தாயும் கண்டித்தனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த மதன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மதனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |