மனைவி மற்றும் குழந்தையுடன் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள நவலை கிராமத்தில் ரங்கீஸ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று திடீரென தரையில அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் நடத்தி விசாரணையில் ரங்கீஸ் குமார் கூறியதாவது, நவலை கிராமத்தில் எனக்கு இருக்கும் சொந்த இடத்தில் சிறிய அளவில் பிரியாணி கடை நடத்தி வருகிறேன். எனது கடை இருக்கும் இடத்தில் வழித்தட பாத்தியம் இருப்பதாக ஒருவர் கூறி என்னை மிரட்டுகிறார்.
மேலும் அவர் கடைக்குள் நுழைந்து பொருட்களை உடைத்து சேதப்படுத்தினார். இதனை தட்டி கேட்ட எனது குடும்பத்தினரை அவர் சரமாரியாக தாக்கியுள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக ரங்கீஸ் குமார் தெரிவித்துள்ளார். பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.