நடிகர் துல்கர் சல்மான் தனது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மலையாள திரையுலகில் கடந்த 2012 -ஆம் ஆண்டு வெளியான செகண்ட் ஷோ படத்தின் மூலம் அறிமுகமானவர் துல்கர் சல்மான். இதையடுத்து இவர் சலலாஹ் மொபிலஸ், சார்லி, உஸ்தாத் ஹோட்டல் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதன்பின் இவர் வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த ஓ காதல் கண்மணி படம் இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
மேலும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் விஜய் டிவி தொகுப்பாளர் ரக்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் துல்கர் சல்மான் ரம்ஜான் ஸ்பெஷலாக தனது மனைவி மற்றும் மகளுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த கியூட் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகிறது .