மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு கொன்று கூறுபோட்ட கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் யோகேஷ்-ஆர்த்தி தம்பதியினர். ஆர்த்தி மீது கணவனுக்கு சந்தேகம் எழுந்ததால் கணவன் மனைவி இடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டது. இதன் காரணமாக 2016-ஆம் ஆண்டு யோகேஷ் தனது மனைவி ஆர்த்தியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி ஊர் முழுவதிலும்உடல் பாகங்களை கொட்டினார்.
அங்கிருந்த நாய்கள் கிடைத்த உடல் பாகங்களை சாலையில் வைத்து சாப்பிட்டுக் கொண்டு இருந்ததைப் பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவர் தான் கொலை செய்தார் என்பது தெரியவந்தது.
இந்த வழக்கில் நான்கு வருடங்களாக நடந்துவந்த நிலையில் சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி யோகேஷ்க்கு நீதிபதி சந்தீப் ஆனந்த் 25,000 அபராதம் விதித்து ஆயுள் தண்டனை வழங்கினார். இதனை தொடர்ந்து யோகேஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.