திருமணமான இரண்டே மாதத்தில் மனைவின் மீது சந்தேகப்பட்டு கணவன் அவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே வர்க்கலை பகுதியை சேர்ந்தவர் அனீஸ். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆலப்புழா பகுதியை சேர்ந்த நிகிதா என்ற இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர்கள் இருவருக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் இருவருக்குள் முற்றி போக ஆத்திரமடைந்த அனீஸ் அருகில் இருந்த விளக்கை எடுத்து தனது மனைவியை நிகிதாவின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.
இதில் நிகிதா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். பின்னர் நிகிதாவின் உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். நிகிதாவின் மேல் ஏற்பட்ட சந்தேகத்தினால் தான் அனீஸ் அவரை கொலை செய்ததாக கூறப்படுகின்றது. நிகிதாவின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பெயரில் கணவர் அணிஸ்சை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான இரண்டு மாதங்களில் ஏற்பட்ட சண்டையில் கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.