Categories
உலக செய்திகள்

மனைவி வேண்டாம்…! கள்ள காதலி போதும்… விசாரணையில் அதிர்ச்சி …! வசமாக சிக்கிய இந்திய வம்சாவளியினர் ..!!

கனடாவில் இந்திய வம்சாவளியினரான  ஒருவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்ததன் காரணமாக தன் மனைவியை கொலை செய்த வழக்கில் முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளது.

இந்திய வம்சாவளியினரான பூபிந்தர்பல் கில் (43)என்பவர் குர்ப்பீட் ரொனால்ட் (37) என்ற வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்து இருந்ததால் ஜக்தர் கில் (43) என்ற தன்  மனைவியை இருவரும் சேர்ந்து கொலை செய்ததாக இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது .ஆனால் அவர்கள் நீதிமன்றத்தில் தங்கள் மீதான தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீட்டு செய்தார்கள். அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றமும் மீண்டும் விசாரணை துவக்க வேண்டும் என்று மேல் முறையீட்டுக்கு  உத்தரவிட்டது. புதிய விசாரணையில் எதிர்பாராதவிதமாக குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் எதிராக பல ஆதாரங்கள் சிக்கியுள்ளன.

staff sgt .Ugo கர்னிவு என்னும் போலீஸ் அதிகாரி சம்பவம் நடந்த வீட்டை ஆய்வு செய்து பார்த்ததில் அங்காங்கே சிறு இரத்த துளிகள் கிடந்ததை கண்காணித்து இருக்கிறார். வீட்டுக்குவெளியவும்  சில இரத்ததுளிகள்  கிடப்பதை கண்காணித்துள்ளார் . சந்தேகம் ஏற்பட்டு உடனே டி .என். ஏ சோதனைக்கு அனுப்பி உள்ளார் அந்த ரத்தம் துளிகள் சந்தேகப்பட்ட மாதிரி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள என்ற குர்ப்பீட் ரொனால்ட் என்ற பெண்ணுடையது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையில் பெண் போலீசாரான  Det டெனா கல்லிச்சொன்  சம்பவம் நடந்த அன்று வீட்டிற்கு வெளியே ஒரு பெண்ணை சந்தித்துள்ளார். அந்தப் பெண் வேறு யாருமில்லை குற்றம் சாட்டப்பட்ட குர்ப்பீட் ரொனால்ட்.

குர்ப்பீட் ரொனால்ட் தான் என்பது டெனாவுக்கு தெரியாது .குர்ப்பீட் ரொனால்ட் எதுவும் தெரியாத மாதிரி அந்த வீட்டில் என்ன நடந்தது என்று போலீசாரிடம் விசாரித்துள்ளார். அதற்கு டெனாவும் வீட்டில் பெண் இறந்து கிடப்பதாக தெரிவித்துள்ளார் .மேலும் போலீசார் அந்த வீட்டுக்கு செல்லும்போது அந்த வீட்டில் இருந்த குழந்தைகளை குர்ப்பீட் ரொனால்ட் தன் அருகே வைத்துக்கொண்டு அவர்களை அக்கறையுடன் கவனிப்பது போல் நடித்துள்ளார் .இதைதொடர்ந்து பெண் அவசர மருத்துவ குழுவை சேர்ந்த ஒருவரிடம் சென்று என்ன நடந்தது என்று விசாரித்துள்ளார். அந்த  பெண்ணும் வேறு யாருமில்லை குர்ப்பீட் ரொனால்ட் தான் என்று அந்த மருத்துவ குழுவை சேர்ந்த நபர் நீதிமன்றத்தில் சாட்சி அளித்துள்ளார் .

மேலும் பூபிந்தர்பல்  கில் மற்றும் குர்ப்பீட் ரொனால்ட் இருவரும் சேர்ந்து தான் ஜக்தர் கில்லை திட்டமிட்டு கொலை செய்துள்ளதாக  அரசு வழக்கறிஞர் தனது வாதத்தை முன் எடுத்து வைத்துள்ளார். தனது குழந்தைகளை வெளியே அழைத்துக்கொண்டு பூபிந்தர்பல்  கில் மனைவியை மட்டும் உள்ளே தனியாக இருக்க சொல்லியுள்ளார். பின்பு குர்ப்பீட் ரொனால்ட் வீட்டுக்கு வந்து அவரை கொலை செய்ததாக வழக்கறிஞர்கள் தங்கள் கருத்துகளை எடுத்துவைத்து வாதிடுகின்றனர் . மேலும் இது குறித்து பல ஆதாரங்கள் சிக்கியுள்ளன அதனால் குற்றவாளிகள் தப்பிக்கவே  முடியாது.

Categories

Tech |