டீம் இந்தியா கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், மான்கட் முறையில் அவுட் செய்த தனது வீராங்கனையான தீப்தி ஷர்மாவை ஆதரித்து பேசியுள்ளார்..
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதலில் 3 போட்டிகள் டி20 தொடர் நடைபெற்றது. இதில் இந்திய மகளிர் அணி 1 -2 என்ற கணக்கில் இங்கிலாந்து மகளிர் அணியிடம் தொடரை இழந்தது. இதனை தொடர்ந்து 3 போட்டியில் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடந்தது. இதில் முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி வென்று தொடரை வென்ற நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று லண்டனில் நடைபெற்றது.. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 45.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 43.3 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.. இதனால் இந்திய அணி 3 -0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது..
இப்போட்டியில் சேஸ் செய்யும்போது 35.2 ஓவரில் 118/9 விக்கெட் இழந்து தவித்தது இங்கிலாந்து மகளிர் அணி. அப்போது சார்லி டீனுடன், டேவிஸ் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது 44ஆவது ஓவரை தீப்தி சர்மா வீசினார்.. அந்த ஓவரின் 3ஆவது பந்தை தீப்தி வீசுவதற்கு முன்பாகவே நான் -ஸ்ட்ரைக்கில் இருந்த சார்லி டீன் கோட்டை விட்டு வெளியேறி ரன் எடுக்க முயல, அவர் மன்கட் முறையில் ரன் அவுட் செய்து அம்பெயரிடம் அவுட் கேட்டார்.. இதையடுத்து 3ஆவது நடுவரிடம் கேட்கப்பட, டிவி ரீபிளேவில் அவுட் என வந்தது.. இதனால் 47 ரன்கள் எடுத்திருந்த டீன் துரதிர்ஷ்டவசமாக அவுட் ஆனார்.. இதனால் இந்தியா வென்றது.
டேவிஸ் 10 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். இதனை தாங்கிக்கொள்ள முடியாத டீன் கண்ணீர் விட்டு அழுதுவிட்டார்.. அவரை சக வீரரான டேவிஸ் தேற்றுகிறார்.. இந்த அவுட்டால் பெவிலியனில் இருந்த இங்கிலாந்து வீரர்களும் சற்று அதிர்ச்சியடைந்தனர்.. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது..
இதேபோல ஐபிஎல்லில் பட்லரை தமிழக வீரர் அஸ்வின் அவுட் செய்திருப்பார்.. அது தற்போது நினைவுக்கு வருகிறது.. இதுகுறித்து கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. இதற்கு பலரும் ஐசிசி விதிகளில் உள்ளதை செய்ததாக பாராட்டினாலும், சிலர் ஒருமுறை அவரை எச்சரித்திருக்கலாம் இப்படி அவுட் செய்திருக்க கூடாது என்று கூறி வருகின்றனர்..
மேலும் முன்னாள் இங்கிலாந்து வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் இது கிரிக்கெட் ஆன்மாவிற்கு எதிரானது என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.. அதே நேரத்தில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், முன்னாள் வீரேந்திர சேவாக் ஆகியோர் தீப்தி சர்மாவுக்கு ஆதரவாக பேசி உள்ளனர். ஐசிசி விதியில் மன்கட் உள்ளது, அதை தான் தீப்தி செய்துள்ளார். இதுஅதிகாரப்பூர்வமாக இருக்கிறது, எனவே இதில் எந்த தவறும் இல்லை என்று இந்திய ரசிகர்கள் ஆதரவாக பேசி வருகின்றனர்.
மேலும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் போது நியூசிலாந்து அணிக்கு எதிராக பவுண்டரிகளின் அடிப்படையில் நீங்கள் (இங்கிலாந்து ஆடவர் அணி) கோப்பையை வென்றீர்களே அதுவும் இந்த விதி தானே? அதை மட்டும் ஏற்றுக் கொள்ளும் நீங்கள் இதையும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று பதிலை இந்திய ரசிகர்கள் முன்வைத்து வருகின்றனர்..
Here's what transpired #INDvsENG #JhulanGoswami pic.twitter.com/PtYymkvr29
— 𝗔𝗱𝗶𝘁𝘆𝗔 (@StarkAditya_) September 24, 2022
இந்நிலையில் வெற்றிக்குப்பின் இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இந்த விக்கெட் கேள்வி குறித்து பின்வாங்காமல் தகுந்த பதிலைக் கொடுத்தார். அவர் கூறியதாவது, “உண்மையாகச் சொல்வதானால், எளிதாக எடுக்க முடியாத 10 விக்கெட்டுகளைப் பற்றி நீங்கள் கேட்பீர்கள் என்று நினைத்தேன். [கடைசி விக்கெட்டைப் பற்றி ஆராயும்போது]. இது ஆட்டத்தின் ஒரு பகுதி. நாங்கள் புதிதாக ஒன்றைச் செய்தோம் என்று நான் நினைக்கவில்லை. இது உங்கள் விழிப்புணர்வைக் காட்டுகிறது, பேட்டர்கள் என்ன செய்கிறார்கள் என்று. நான் எனது வீரர்களுக்கு ஆதரவளிப்பேன், அவர் (தீப்தி சர்மா) விதிகளுக்குப் புறம்பாக எதையும் செய்யவில்லை. நாளின் முடிவில் ஒரு வெற்றி வெற்றி மற்றும் நாம் அதை நீங்கள் அனுபவிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்..
What a befitting reply by Captain Harmanpreet Kaur when asked about the Charlotte Dean's runout. The presenter said that she avoided his question on which she replied that why don't he ask about the first 9 wickets. Captain Kaur is always on fire 🔥#ENGvIND #JhulanGoswami pic.twitter.com/2PSYD4Y8mt
— Laughter Corridor (@laughtercoridor) September 24, 2022
Indian Skipper Harmanpreet Kaur's reply to the Run out
credits : willow tv hd#ENGvIND pic.twitter.com/aI0W9f6e9p
— Pooja (Captain Healy) (@Alyssa_Healy77) September 24, 2022