Categories
உலக செய்திகள்

மன்னர் சார்லஸால் புதிய பட்டம் பறிக்கப்படுமா…? கோரிக்கையில் கையெழுத்திட்ட மக்கள்…!!!!!!

பிரித்தானிய ராஜ குடும்பமானது தொன்மையான அடக்குமுறை பாரம்பரியம் கொண்டது என வேல்ஸ் கவுன்சில் உறுப்பினர் ஒருவர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ராணியார் இரண்டாம் எலிசபெத் காலமானதை அடுத்து மன்னராக சார்லஸ் முடிசூட இருக்கும் தருணத்தில் இந்த முடிவிற்கு வேலஸ் கவுன்சில் வந்திருக்கின்றது. மேலும் ராணியாரின் மறைவுக்குப் பின் வேல்ஸ் இளவரசர் பட்டம் ஆனது இளவரசர் வில்லியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. வேல்ஸ் கவுன்சில் முடிவால் இளவரசர் வில்லியத்திடமிருந்து குறித்த புகைப்படம் பறிக்கப்படுமா என்ற கேள்வியும் தற்போது எழுப்பப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் 1969ல் சார்லஸ் வேல்ஸ் இளவரசன் பட்டம் பெறும்போது அங்குள்ள மக்களால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது மட்டுமல்லாமல் முக்கிய நபர்களால் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தற்போது அதே சூழ்நிலை உருவாகி இருக்கிறது. அதாவது வேல்ஸ் மக்களிடம் ஆலோசனை பெற்று குறித்த பட்டம் நீக்கப்பட வேண்டுமா என்பது இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்ற கருத்தும் நிறைவேறுகிறது.

வேல்ஸ் தற்போது நவீன மயமாக்கப்பட்ட ஜனநாயக நாடு அங்குள்ள மக்களிடம் அவர்களின் கருத்துக்களை பதிவு செய்வதை முறை என்றும் தெரிவிக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் தங்கள் மனநிலையை தற்போதைய வேல்ஸ் இளவரசர் பட்டம் பெற்ற வில்லியம் புரிந்துகொள்வார் என நம்புவதாக கவுன்சில் உறுப்பினர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் இதுவரை 36 ஆயிரம் மக்கள் குறித்த பட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கையில் கையெழுத்திட்டு இருக்கின்றனர். 1283ல் இங்கிலாந்து மன்னர் முதலாம் எட்வர்டு கட்டளை இல்லாமல் உண்மையான வேல்ஸ் இளவரசர் Dafydd ap gruffydd கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அதன் பின் அந்த குறித்த பட்டமானது எட்வர்டு மன்னர் 16வது வயது மகனுக்கு சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |