Categories
உலகசெய்திகள்

மன்னர் சார்லஸ் – கமீலா விவாகரத்து செய்தால் இது தான் நடக்கும்…? வெளியான தகவல்…!!!!!

மன்னர் சார்லஸை திருமணம் செய்வதற்கு முன்னரே கமீலாவின் சொத்து மதிப்பு பெரிய அளவில் இருந்ததாக தெரிய வந்திருக்கிறது. பிரித்தானியாவின் மன்னராக சார்லஸ் பொறுப்பேற்ற நிலையில் அதன் காரணமாக அவர் மனைவி கமீலாவிற்கு queen consort பதவி கிடைத்திருக்கிறது சார்லஸ் எப்படி கமீலாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டாரோ அதேபோல் கமீலாவும் சார்லஸை இரண்டாவதாக திருமணம் செய்தவர்தான். ஏனென்றால் கமீலாவுக்கும் ஆண்ட்ரூபர்கர் என்பவருக்கும் 1973இல் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் 1995ம் வருடம் இருவரும் பிரிந்தனர். கமீலா சார்லஸை மணப்பதற்கு முன்னரே செல்வந்தர் தான்.

ஏனென்றால் அவரின் தந்தையான மேஜர் புரூஸ் சந்த் வெற்றிகரமான தொழிலதிபர் ஆவர். இண்டிபெண்டன் வெளியிட்ட தகவலின்படி கமீலாவின் பெற்றோர் அவருக்கு பரம்பரை சொத்தாக £500,000ஐ விட்டு சென்றுள்ளனர். கமீலா தனது முதல் கணவர் ஆண்ட்ரூவிடமிருந்து விவாகரத்து பெற்றபோது எவ்வளவு பணம் கிடைத்தது என்பது பற்றி தெளிவான தகவல் இல்லை. Celebrity net worth கூற்றுப்படி கமலாவின் தற்போதைய நிகர மதிப்பு $5 மில்லியன் ஆகும். மேலும் இது அவரது தனிப்பட்ட வருமானம் மட்டுமே மன்னர் சார்லஸின் $500-$600 மில்லியன் சொத்து இந்த கணக்கில் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில் அரச குடும்ப விவாகரத்து என்பது புதிதல்ல ஏனென்றால் இந்த விஷயம் நடந்தால் எப்படி கையாளப்படும் என்பதற்கு ஒரு முன்னுதாரணம் இருக்கிறது.

அதாவது சார்லஸ் டயானா விவகரத்தை எடுத்துக் கொள்ளலாம் ஏனென்றால் விவாகரத்திற்கு பின்னர் டயானா கென்சிங்டன் அரண்மனையில் தனது அடுக்குமாடி குடியிருப்புகளை தக்க வைத்துக் கொண்டுள்ளார். மேலும் டயானாவிற்கு அரசு குடும்பம் பயன்படுத்தும் விமானங்களை பயன்படுத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட தகவலின் படி மொத்தமாக $22.5 மில்லியன் பணம் ஆண்டுக்கு $600,000 என பெரிய அளவில் பணத்தை அரச குடும்பத்தில் இருந்து டயானா பெற்றுள்ளார். சார்லஸ் கமீலா விவாகரத்திற்கு வாய்ப்பில்லை என்றாலும் கூட அப்படி நடந்தால் இது போலவே தான் அவருக்கும் வழங்கப்படும் என கூறப்படுகின்றது.

Categories

Tech |