மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி கோவிலில் உழவாரப்பணி நடந்தது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் இருக்கும் ராஜகோபால சுவாமி கோவிலில் உழவாரப்பணி குழு சார்பாக உழவாரப்பணியானது நடந்தது. இந்த உழவாரப் பணியை மாவட்ட என்.எஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜப்பா தொடங்கி வைக்க சங்கரா உழவாரப்பணி குழுவின் ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமை தாங்க அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் வாசுதேவன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள்.
இதில் ராமர் பாதம் தொடங்கி யாகசாலை பகுதி வரை உள்ள செடி, கொடிகளை அகற்றினார்கள். மேலும் இதில் ராஜகோபாலசாமி அரசு கலை கல்லூரி பேராசிரியர் சந்திரசேகரன், திட்ட அலுவலர் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.