Categories
உலக செய்திகள்

மன்னார் படுகை பகுதி: எண்ணெய் ஆய்வு பணிக்கு திட்டம்…. இலங்கை மந்திரி வெளியிட்ட தகவல்….!!!!

இலங்கை நாடு கடும் பொருளாதார நெருக்கடி, அதன் தொடர் விளைவாய் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு என சிக்கி தவித்து வருகிறது. இந்த நிலையில் அந்நாட்டு மந்திரிசபை கூட்டம் நேற்று நடந்தது. அந்த கூட்டத்தில் பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதிக்கு இந்தியாவின் எக்சிம் வங்கியிடம் ரூபாய் 3 ஆயிரத்து 878 கோடி கடன் கோருவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து மின்சாரம் மற்றும் எரிசக்தித் துறை மந்திரியான காஞ்சனா விஜேசேகரா நிருபர்களிடம் பேசினார்.

அவர் கூறியதாவது “இந்திய பெருங்கடலின் லட்சத்தீவு கடல் பகுதியிலுள்ள மன்னார் படுகையில் எண்ணெய் இருப்பு குறித்து கடந்த வருடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் அங்கு எண்ணெய் எடுப்பதற்கான சாத்தியக்கூறு தொடர்பாக ஆய்வு செய்வதற்கு நிறுவனங்களை வரவேற்கும் விளம்பரம் செய்ய அரசு திட்டமிட்டு இருக்கிறது” என்று கூறினார். இதில் மன்னார் படுகை பகுதியில் 500 கோடி பீப்பாய் எண்ணெய்யும், 5 லட்சம் கோடி கனஅடி இயற்கை எரிவாயுவும் எடுக்கமுடியும் என ஒரு மதிப்பீடு கூறுகிறது.

அதன் வாயிலாக தன் எரிபொருள், எரிசக்தி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண முடியும் என இலங்கை நம்புகிறது. எனினும் இத்திட்டம் தொடர்பாக சிலகாலமாகவே பேசப்பட்டு வந்தாலும், சரியான முதலீட்டாளர்களை கண்டுபிடிப்பதில் சிக்கல், இலங்கை பெட்ரோலிய மேம்பாட்டு ஆணையத்தில் ஊழியர் பற்றாக்குறை ஆகியவற்றால் இதற்கான முயற்சிகள் இதுவரையிலும் மேற்கொள்ளப்படாமலேயே இருக்கிறது.

Categories

Tech |