தமிழக ரேஷன் கடை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அவர்களுக்கு சம்பளம் வழங்க மாட்டோம், இதில் எவரும் எங்கள் மீது கோபம் கொள்ளக்கூடாது என கூட்டுறவு சங்க பதிவாளர் இல.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
கொரோனா நெருக்கடி காலத்தில் அரசு ஊழியர்கள் இப்படி போராட்டம் நடத்தலாமா ? என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்பி வரும் நிலையில் கூட்டுறவு சங்க பதிவாளரின் இந்த நடவடிக்கைக்கு மக்கள் தரப்பிலிருந்து பெருத்த ஆதரவை எழுந்து உள்ளது. குறிப்பாக ஊரடங்கு காலத்தில் பாமர மக்கள் அவதிப்பட்டு வரும் இந்த நேரத்தில் ஊழியர்கள் இப்படி போராட்டம் செய்வது நியாயமற்றது என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.