செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, இரண்டு, மூன்று விஷயங்கள் ஸ்டாலினுக்கு ஆபத்து. வரும் முன்னர் காவாதான் வாழ்க்கை ஏறி முன்னர் வைத்தார் போல கெடும். இன்றைக்கு ஸ்டாலினை நான் நண்பராக நினைக்கிறேன். அதனால் உங்களை உட்கார வைத்துக் கொண்டு இந்த ஆர்.ராசா தமிழ்நாடு தனி நாடாக மாற்ற வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறார். ஆர் ராசா மீது நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்…
ஆர் ராசா பேசியது அரசாங்கத்தின் கருத்தாக எடுத்துக் கொள்ளப்படும். அப்படி எடுத்துக் கொண்டால் என்ன ஆகும் ? அப்படி என்று இந்த திமுகவில் இருப்பவர்கள், ஊருக்கு 2 சண்டியர்களை பேசவிடுவாங்க ஆர்.ராசா மாதிரி…. அதாவது உங்கள் தகப்பனார் 91-ல் பார்லிமெண்ட்டையே சந்திக்காதா லேம் டக் ப்ரைம் மினிஸ்டர் சந்திரசேகர் அவர் டிஸ்மிஸ் பண்ணாரு. எப்படி?
இங்க கவர்னராக இருந்தவர் உங்கள் நண்பர் சூர்சித் சிங் பர்னாலா….. நீங்கள் அறிக்கை கொடுக்காதீங்கன்னு சொல்லிட்டீங்க. அவர் அறிக்கை கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு, அப்படியே சந்திரசேகர் டிஸ்மிஸ் பண்ணாரு. அதாவது நீங்க சும்மா ஜம்பம் பேசுறது, தொடை தட்டுறது எல்லாம் நடக்காது என்பதற்கு நான் 91-ஐ நியாபகப்படுத்துறேன்.
ஏனென்றால் அரசியலமைச் சட்டம் 356c தெளிவா இருக்கு. எப்பவுமே இந்தமாதிரி அரைகுறை படிப்பு தான். இந்த திராவிடன்ஸ் ஸ்டாக்கிற்கு ஒன்னு படிக்க மாட்டார்கள், படித்தவர்களையும் பிடிக்காது. அப்படி ஒரு பிரகதி. அதனால அவர் அதோடு நிறுத்தி கொள்கிறார். அப்பறம் ஒரு கமா போட்டு or otherwise கவர்னர் அறிக்கை இல்லாவிட்டாலும், அரசாங்கத்தை டிஸ்மிஸ் பண்ணலாம்.
356 பயன்படுத்தத் கவர்னர் அறிக்கை வேண்டும் என்று அவசியம் இல்லை, அப்படி என்று சொல்லி அன்றைக்கு டிஸ்மிஸ் செய்தார்கள். ஆக நீங்கள் இருக்கும்போது தனி தமிழ்நாடு கோரிக்கை வைத்த ஆ. ராசாவை நீங்களே கைது செய்கிறீர்களா இல்ல…. நீங்களும் சேர்ந்து போகிறீர்களா, ஊ சொல்றியா இல்ல ஊ ஊ சொல்றியா அப்படி என்ன கேட்க வேண்டியதாக இருக்கிறது என தெரிவித்தார்.