Categories
தேசிய செய்திகள்

மன்னிப்பு கேட்ட விவசாயிகள்….! ஷாக் ஆன போராட்ட களம்… நாடுமுழுவதும் சோகம்….!!

டெல்லியில்  வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும்  விவசாயிகளில்  22 பேர் கடும் குளிர் காரணமாக உயிரிழந்துள்ளதாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. போராட்டதிற்கு ஆதரவாக மேலும் பல மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லியில்  எல்லைகளில் குவிந்து வருகின்றன. அங்கு நிலவி வரும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அங்கு தங்கி இருந்து போராட்டதில்  ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லியில் அனைத்து எல்லைகளையும்  ஆக்கிரமித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் மக்கள் தங்களின் ஏற்பட்டுள்ள இன்னல்களை தயவுசெய்து பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றும், அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளில் கடும் குளிர் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு  22 பேர் உயிரிழந்துள்ளனர். உயிர் இழந்தவர்களுக்கு வரும் 20-ஆம் தேதி நாடு முழுவதும்   அஞ்சலி  செலுத்த இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |