கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு தனது அடுத்த 2 கிளப் ஆட்டங்களில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது..
1930 ஆம் ஆண்டு முதல் உலக கோப்பை கால்பந்து போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான இந்த கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மிகச்சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. ரஷ்யாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த உலககோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றது. இந்நிலையில் உலகம் முழுவதும் இருக்கும் கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருந்த 22 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கடந்த 20ஆம் தேதி முதல் கத்தாரில் பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகின்றது..
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் எவர்டனில் நடந்த மான்செஸ்டர் யுனைடெட்டின் ஆட்டத்திற்குப் பிறகு ஒரு இளம் ரசிகர் கையிலிருந்த செல்போனை ரொனால்டோ தட்டிவிட்டுள்ளார். இதனால் ரொனால்டோவுக்கு ரூ 49,48,547 அபராதம் விதிக்கப்பட்டு, 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு போட்டிகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார், மேலும் £50,000 அபராதம் (இந்திய மதிப்பில் ரூ 49.4 லட்சம்) விதிக்கப்படுகிறது. கடந்த சனிக்கிழமை 9 ஏப்ரல் 2022 அன்று மான்செஸ்டர் யுனைடெட் எஃப்சி மற்றும் எவர்டன் எஃப்சி இடையேயான பிரீமியர் லீக் ஆட்டத்தின்போது அவரது நடத்தை முறையற்றது என்று ஒப்புக்கொண்டார். ஒரு சுயாதீன ஒழுங்குமுறை ஆணையம் அவரது நடத்தை முறையற்றது மற்றும் வன்முறையானது என அடுத்தடுத்த விசாரணையின் போது கண்டறிந்து, இந்த தடைகளை விதித்தது” என்று குறிப்பிட்டுள்ளது.
ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து வெளியேறி இருக்கும் நிலையில், அவர் அடுத்ததாக எந்த நாட்டு அணியின் புதிய கிளப்பில் இணைந்தாலும் 2 போட்டிகளுக்கு விளையாட தடை என கூறப்பட்டுள்ளது. இந்தத் தடை ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பைக்கு பொருந்தாது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, ரொனால்டோ இன்ஸ்டாகிராமில் மன்னிப்பு கேட்டார், “நாம் எதிர்கொள்ளும் கடினமான தருணங்களில் உணர்ச்சிகளை சமாளிப்பது ஒருபோதும் எளிதானது அல்ல.” இருப்பினும், நாங்கள் எப்போதும் மரியாதையுடனும், பொறுமையுடனும் இருக்க வேண்டும் மற்றும் அழகான விளையாட்டை விரும்பும் அனைத்து இளைஞர்களுக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும். “எனது கோபத்திற்கு நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன், முடிந்தால், நியாயமான விளையாட்டு மற்றும் விளையாட்டுத்திறன் ஆகியவற்றின் அடையாளமாக ஓல்ட் டிராஃபோர்டில் ஒரு விளையாட்டைப் பார்க்க இந்த ஆதரவாளரை அழைக்க விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.
Cristiano Ronaldo has been given a two-game ban and a £50,000 fine by the FA for hitting a cellular phone out of an Everton fans hand during the 2021-22 season.
This ban would apply in any country governed by FIFA regulations. 👀 pic.twitter.com/xovpcL3YY7
— CBS Sports Golazo ⚽️ (@CBSSportsGolazo) November 23, 2022