மன்மதன் திரைப்படத்தில் மொட்டை மதன் கதாபாத்திரத்தில் முதலில் பிரபல நடிகர் நடிக்க இருந்தாராம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு. இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது வரை நடித்து வருகின்றார். சிம்பு காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இருப்பினும் மன்மதன் திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. மன்மதன் திரைப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்திருக்கின்றார். இது ரசிகர்களை கவர்ந்து தற்போதுவரை மனதில் இப்படம் நிற்கின்றது.
இந்நிலையில் இப்படத்தை பற்றி பிரபல நடிகர் பேசியுள்ளார். அவர் வேறு யாருமில்லை கூல் சுரேஷ். இவர் சிம்புவின் ரசிகர் மற்றும் நண்பர் ஆவார். இவர் மன்மதன் திரைப்படத்தில் முதலில் நான் தான் நடிப்பதாக இருந்தது. படத்தில் மதன் வேடத்தில் முதலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் கதை மாறிப்போனதால் சிம்புவே இரண்டு கதாபாத்திரத்திலும் நடித்தார் என கூறியுள்ளார். கூல் சுரேஷ் அண்மையில் பேசிய வீடியோ வைரலாகி வரும் நிலையில் தற்போது இந்த வீடியோவும் வைரலாகி வருகின்றது.