தேனி ஆண்டிபட்டி அருகே அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்த செல்வி கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே நர்சாக வேலை பார்த்து வரும் செல்வி தனது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு விட்டு தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் திடீரென்று கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அவரது செல்போனில் நண்பர்களான 150க்கும் மேற்பட்ட அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அவர்களில் ஆண் செவிலியர் ஒருவர் தான் இந்த கொலையை செய்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் செல்வி வசித்து வந்த வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்தபோது 800க்கும் மேற்பட்ட உயர் ரக ஆணுறை பாக்கெட்டுகளை இருப்பதை கண்டுபிடித்தனர். மேலும் கொலை செய்வதற்கு முன்பாக செல்வி யாருடனோ தவறான செயலில் ஈடுபட்ட தடயங்களும் இருந்தது. செல்வியின் செல்போனை ஆய்வு செய்ததில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் நண்பர்களுடன் அவர் தகாத தொடர்பில் இருந்துள்ளார். இந்த பட்டியலில் அவருக்கு அறிமுகமான முக்கிய அரசியல் பிரமுகர்கள், காவல்துறையினர், செவிலியர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், கூலித்தொழிலாளி உள்ளிட்ட பலரிடம் விசாரணை செய்யப்பட்டது.
அப்போது கடந்த 9ஆம் தேதி கோடங்கிபட்டி சேர்ந்த கம்பம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்த ராமச்சந்திர பிரபு என்பவரை விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் அவர் மீது சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணை செய்த அடுத்த 10 நாளில் அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் ராமச்சந்திர பிரபுவும், செல்வியும் ஒன்றாக பணிபுரிந்து வந்துள்ளனர். இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
அவர்கள் இருவருக்கும் வேறு வேறு இடங்களில் பணிமாறுதல் அளிக்கப்பட்ட போதும் தொடர்ந்து தங்களது உறவுகளை தொடர்ந்து வந்துள்ளனர். இந்த கொலை சம்பவம் கடந்த 24ஆம் தேதி நடைபெற்றது. கொலை நடந்த அன்று 4 மணி அளவில் நர்சு செல்வியின் வீட்டில் தனியார் நிறுவனமொன்றில் ராமச்சந்திர பிரபு ஒரு பவுன் நகை ஒன்றை அடகு வைத்ததற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து நர்சு செல்வியை ராமச்சந்திர பிரபுதான் கொலை செய்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஒரு வழியாக துப்பு தொடங்கிய நிலையில் செல்வியிடம் 150 ஆண் நண்பர்கள் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.