முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை சீராக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவருக்கு மூச்சுத்திணறல், நெஞ்செரிச்சல் உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று தேசம் பிரார்த்தனை செய்வதாக காங்கிரஸ் கட்சி தலைமை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தது.
Former Prime Minister Dr. Manmohan Singh admitted to All India Institute of Medical Sciences, Delhi
(file photo) pic.twitter.com/SAm5NOpeiF
— ANI (@ANI) October 13, 2021
இந்நிலையில் மன்மோகன் சிங் உடல் நலம் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் ஒரு செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அவரது உடல்நலம் சீராக உள்ளது என்றும் அவருக்கு வழக்கமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.