Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மன அழுத்தத்திற்கு இதுதான் தீர்வா..? பெண் எடுத்த விபரீத முடிவு… பெரம்பலூரில் சோக சம்பவம்..!!

பெரம்பலூரில் மன அழுத்தத்தில் இருந்த பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இலந்தலப்பட்டி கிராமத்தில் ரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா (எ) தமிழரசி என்ற மனைவி இருந்தார். இவர் சில தினங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழரசி நேற்று முன்தினம் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த பாடாலூர் காவல்துறையினர் தமிழரசியின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |