Categories
தேசிய செய்திகள்

“மன அழுத்தம்”…. ஐஐடி மாணவர் செய்த செயல்…. பெரும் சோக சம்பவம்…..!!!!

ஐஐடி மும்பையில் முதுகலை பட்டதாரி மாணவர் தற்கொலை  செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் தர்ஷன் மாளவியா என்ற மாணவர் வசித்து வந்தார். இவர் நீண்ட காலமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மாணவர் மாளவியா தனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதி வைத்துவிட்டு 4-வது மாடியில் உள்ள தனது விடுதி அறையில் இருந்து குதித்து விட்டார். இதனையடுத்து அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு பணியாளர் ஒருவர் ஓடிவந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் மாளவியா கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் சம்பந்தப்பட்ட விடுதி அதிகாரிகளுக்கும், சக மாணவர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

இதனைதொடர்ந்து மாணவர் மாளவியாவை  மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மாணவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் ஐஐடியில் சேருவதற்கு முன்பாகவே மாளவியா மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

Categories

Tech |