மன அழுத்தம் இன்று பெரும்பாலான மக்களிடம் இருக்கும் மிகப்பெரிய கொடிய நோய். இந்த மன அழுத்தம் மக்களை பல வழிகளில் கஷ்டப்படுத்துகிறது. மன அழுத்தத்தில் இருக்கும் நபர்கள் சாதாரணமாக வெளியில் செல்ல கூட பயப்படுவார்கள். மன அழுத்தத்தினால் பலர் தற்கொலைக்கு முயற்சி செய்து வருகின்றனர். தற்கொலை எப்போதும் ஒரு பிரச்சனைக்கு தீர்வாகி விட முடியாது. அதை எதிர்த்து நாம் போராட வேண்டும். அப்படி மன அழுத்தத்தில் இருந்த சில சினிமா பிரபலங்கள் பற்றி தான் இதில் நாம் பார்க்க போகிறோம்.
நடிகை பாவனா 80க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்த இவர் கொச்சின்னுக்கு பயணித்துக் கொண்டிருந்த போது கூட்டு பாலியல் தாக்குதலுக்கு உள்ளானார். இது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சாட்டில் நடிகர் திலீப் பெயரும் இடம் பெற்றது. இவர் பாவனாவுடன் 12க்கும் மேற்பட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்கள் சிறையில் இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பேசிய அவர் அந்த சம்பவத்திற்கு பின் என் வாழ்க்கை தலைகீழாக மாறியது. நரக வேதனையில் இருந்தேன். வீடியோக்களில் என்னை தவறுதலாக பேசி மேலும் தன்னை மன அழுத்தத்திற்கு ஆளாக்கினார்கள்.
ஏன் இரவு 7:00 மணிக்கு மேல் பயணம் செய்கிறீர்கள் என்னுடைய ஒழுக்கத்தைப் பற்றி தவறாக பேசினார்கள். நான் உடைந்து போனேன். சில நேரங்களில் எனக்கு அப்படியே கத்தி அழ வேண்டும் என்று தோன்றும். ஐந்து முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன். அதன் பிறகு எனது குடும்பத்தினர் எனது நண்பர்கள் தன்னை மீட்டுக் கொண்டு வந்தனர் என்று தன் வாழ்வில் நடந்த சம்பவத்தை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். அடுத்தது சமந்தா விவாகரத்துக்கு பின்னர் மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வந்ததற்கான முக்கிய காரணம் எனது நண்பர்கள் மற்றும் ஆலோசகர்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். இவர் தனது காதல் கணவரை விவாகரத்து செய்த பிறகு மிகுந்த மன உளைச்சலில் இருந்தார் . இதனால் அவர் முதலில் செய்தது மருத்துவரிடம் ஆலோசனை பெற்றது. அதன் பிறகு ஆன்மீக சுற்றுலா நண்பர்களுடன் வெளியில் சென்று தன்னைத் தானே தேற்றி தற்போது மீண்டும் தனது முழு கவனத்தையும் திரைப்படத்தில் செலுத்தி நடித்து வருவதாக தெரிவித்தார்.