பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கூவாகம் பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியங்கா என்ற மனைவி உள்ளார். இவர் அரியலூர் ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரியங்கா உடையார்பாளையம் தெற்கு காலனி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது பிரியங்கா குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை பார்த்த பொதுமக்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பிரியங்காவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மன அழுத்தம் காரணமாக பிரியங்கா தற்கொலைக்கு முயன்றாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.