ஒரு மனிதனுக்கு உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு மன ஆரோக்கியமும் முக்கியம். மன ஆரோக்கியம் தவறும் பட்சத்தில் அந்த மனிதனும் அவரைச் சுற்றியுள்ள அனைவரும் பாதிப்பை சந்திக்க நேரிடும்.அவசரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில் பலரும் மன அழுத்தம் மற்றும் மனம் சோர்வு உள்ளிட்ட பல நோய்களுக்கு ஆளாகிறார்கள்.
அனைவரும் மன ஆரோக்கியத்திற்காக தினமும் சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். அவ்வாறு மன ஆரோக்கியத்தைப் பெற,ஒருவர் நம்மை குறித்து ஏதாவது நினைக்கிறார் என்பதை முதலில் நாம் நினைவுக்கு கொண்டு வரக்கூடாது. யாரைப் பற்றியும் சிந்திக்காமல் நமது வேலையில் நாம் ஈடுபட வேண்டும். தேவையில்லாத விஷயங்களைப் பற்றி சிந்தித்து குழம்பினால் மன நிம்மதி இழந்து விடும்.
உங்களின் மனதிற்கு சரி என்று தோன்றினால் அதை பின்பற்றுவதற்கு எவ்வித தயக்கமும் காட்ட வேண்டாம் . இதனால் தேவையற்ற சிந்தனைகள் எழுவது தடைப்படும். நெருக்கடியான சூழலில் தன்னம்பிக்கை இழக்க நேரிடும். அதற்கு இடம் கொடுக்காமல் மனதை லேசாக வைத்துக் கொள்ளுங்கள். அதற்காக தியானம் மற்றும் யோகா போன்றவற்றை செய்யலாம். நகைச்சுவை உணர்வு இருந்தால் எந்த சூழலையும் எளிதில் எடுத்துக் கொண்டு கையாள முடியும். மனம் நிம்மதியாக இருக்கும்.
தினம்தோறும் ஒரே மாதிரியான வழக்கத்தை பின்பற்றுவது மனதுக்கு சளிப்புணர்வை உண்டாக்கி மனநிலையை உருவாக்கும். சின்ன விஷயமாக இருந்தாலும் அது வழக்கத்திற்கு மாறாக நடந்தால் பயத்தை உண்டாக்கி விடும். அவ்வாறு உணரும் போது வழக்கமான நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். தினமும் காலை மற்றும் இரவில் குறிப்பிட்ட விஷயங்களை செய்வதற்கு நேரம் ஒதுக்க வேண்டும்.அதிலும் குறிப்பாக உடற்பயிற்சி மற்றும் தியானம் செய்தால் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கலாம். இரவில் தூங்க செல்வதற்கு முன்பு செல்போன் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. பிடித்தமான உணவுகளை சாப்பிட்டு பிடித்தவர்களுடன் பழகி மனதை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருங்கள்.