Categories
சினிமா தமிழ் சினிமா

மன உளைச்சலால் அப்படி பேசிட்டேன்…. என்னை விட்டுருங்க…. மன்னிப்பு கேட்ட மீராமீதுன்…!!!

சர்ச்சைக்கு பெயர் போனவர் நடிகை மீரா மிதுன் . இவர் பட்டியல் இன மக்களை குறித்து அவதூறாக பேசிய வீடியோ வெளியிட்டதை அடுத்து பலரும் இவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் காவல்துறையினர் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவருக்கு உதவியாக இருந்த அவருடைய காதலன் அபிஷேக்கையும் கைது செய்தனர்.

இந்நிலையில் நடிகை மீரா மிதுன் மற்றும் அவருடைய ஆண் நண்பர் அபிஷேக் ஷியாமும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். வாய்தவறி பட்டியலின மக்கள் குறித்து பேசியதாகவும், தன்னைப் பற்றி அவதூறாக செய்தி பரவியதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அவ்வாறு பேசியதாகவும் மீராமிதுன் மனுவில் மன்னிப்பு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |