மன அழுத்தம் மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையினால்தான் பெண்களுக்கு முடி உதிர்வு அதிகமாக இருக்கிறது.
மக்களின் இயல்பு வாழ்க்கையை கொரோனா வைரஸ் தலைகீழாக மாற்றியுள்ளது. உதாரணம் உடல் உழைப்பு, உணவு, தூக்கம் அனைத்தும் தான். இதனால் மக்கள் பலவிதமான உடல் உபாதைகளை அனுபவித்து வருகின்றனர். அதில் மிகவும் முக்கியமான ஒன்று தான் தலைமுடி உதிர்வு. இந்த பிரச்சனை வழக்கமான ஒன்றாக இருந்தாலும் லாக் டவுனில் அதிகமாகவே உதிர்கிறது. இதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் மன அழுத்தம் மட்டும்தான்.
முடி உதிர்வை தடுக்க
வைட்டமின் பி மற்றும் சிங்க் சத்துள்ள உணவு பொருட்களை எடுத்துக் கொள்வதினால் தலைமுடி உதிர்வை குறைத்தும் வளர்ச்சியை தூண்டவும் இயலும்.
வைட்டமின் சி, டி மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதினால் முடியின் வளர்ச்சியை அதிகரிக்க இயலும்.
நமது உடலில் நீர்ச்சத்து அதிக அளவில் இருந்தால் முடி உதிர்வை தடுக்கும்.
வீட்டில் இருக்கும் போது ஹேர்ஸ்பிரே, ஹேர் ஸ்டிக், ஹேர் டிரையர், ஸ்ட்ரைட் னர், ஹேர் கலரிங் ஆகியவற்றைப் பயன்படுத்துவதை தவிர்த்தல் நல்லது.
உங்கள் தலைமுடியை சுத்தமாக வைத்துக் கொள்வது நன்று.
உங்கள் தலைமுடியை வறட்சியாக விடாமல் தேங்காய் எண்ணையை தடவி பின்னல் போட்டுக் கொள்ளுங்கள் இதுவே இதற்கு தீர்வாக அமையும்.